சுற்றுலா அமைச்சகம்
நெட்ஃபிளிக்ஸ் மூலம் சுற்றுலா மேம்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2025 3:35PM by PIB Chennai
இந்திய சுற்றுலா தலங்களை சினிமா கதைசொல்லல் மூலம் உலக அளவில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சுற்றுலா அமைச்சகம் நெட்ஃபிளிக்ஸ் என்டர்டெயின்மென்ட் சர்வீசஸ் இந்தியா எல்எல்பியுடன் வணிகரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டது.
குஜராத் மாநிலம் உட்பட நாட்டின் இயற்கை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தளங்களை மேம்படுத்துவது நெட்ஃபிக்ஸ் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடங்கும்.
இந்தத் தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
******
(Release ID: 2196908)
SS/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2197210)
வருகையாளர் எண்ணிக்கை : 36