கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது: மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 3:40PM by PIB Chennai

நாட்டின் பாரம்பரிய கலைகள் உள்ளிட்ட பல்வேறு வகை கலைஞர்களுக்கு மற்றும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கான கலை மற்றும் பண்பாட்டு திட்டத்தை கலாச்சார அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.

கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான புத்தொழில் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நிதித் திட்டம் ஏதும் கிடையாது. இந்தியாவின் திருவிழா என்ற பெயரின் கீழ், இந்திய கலைஞர்கள் வெளிநாடுகளில் பாரம்பரியம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பாரம்பரிய கலை வடிவங்கள் குறித்த அனைத்துவித கலை மற்றும் கலாச்சாரங்களை ஊக்கப்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, தஞ்சாவூர் (தமிழ்நாடு) பாட்டியாலா (பஞ்சாப்), நாக்பூர் (மகாராஷ்டிரா), உதய்ப்பூர் (ராஜஸ்தான்), பிரயாக்ராஜ் (உத்தரப்பிரதேசம்), கொல்கத்தா (மேற்கு வங்கம்), திமாபூர் (நாகாலாந்து), ஆகிய இடங்களில் மண்டல கலாச்சார மையங்கள் ஆகியவற்றை மத்திய அரசு அமைத்துள்ளது. சங்கீத நாடக அகாடமி மூலம் நாடு முழுவதும் நாட்டுப்புற, பழங்குடியின மற்றும் பாரம்பரிய கலைஞர்களின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196922&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2197191) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी