குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதியத்திற்கு மூலதனமாக 9,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
01 DEC 2025 2:47PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) நிதியுதவி அளிப்பதற்கும் குறித்த காலத்தில் வரவேண்டிய தொகைகளைப் பெறுவதற்கும், மாறி வரும் தொழில்நுட்பங்களை விரைந்து செயல்படுத்துவற்கும் ஏதுவாக பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதியத்திற்கு 9,000 கோடி ரூபாய் மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்நிறுவனங்களுக்கு கூடுதல் கடனுதவியாக 2 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்த செலவில் கடன் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கடன் உத்தரவாதத் திட்டத்திற்கான உச்சவரம்புத் தொகை 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக (1.4.2025) அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் 90 சதவீதம் கடன் வழங்கப்படும்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் முன்பண மானியத்தொகையாக 35 சதவீதம் புதிதாக உருவாக்கப்படும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. வேளாண் சாராத நிறுவனங்களுக்கு திட்டச் செலவாக 50 லட்சம் ரூபாயும் உற்பத்தி மற்றும் சேவை துறையைச் சார்ந்த நிறுவனங்களுக்கு திட்டச் செலவாக 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அத்துறைக்கான இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196858®=3&lang=1
***
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2197165)
आगंतुक पटल : 7