புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீட்டு உபயோக நுகர்வு செலவினக் கணக்கீடு குறித்த மாவட்ட அளவிலான மதிப்பீட்டு முறை

प्रविष्टि तिथि: 01 DEC 2025 1:53PM by PIB Chennai

தேசிய புள்ளியியல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல் குழுவின் பரிந்துரையின் பேரில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடல் அமைச்சகம், வீட்டு உபயோக நுகர்வு செலவுகள் குறித்தக் கணக்கீட்டின் அடிப்படையிலான மாவட்ட நிலையில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சோதனை அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த  சோதனை அடிப்படையிலான ஆய்வில் 2022-23-ம் ஆண்டிற்கான வீட்டு உபயோக நுகர்வு செலவுகள் குறித்த கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட அளவில், நுகர்வோர் செலவுகள் அடிப்படையிலான மாதாந்தர தனிநபர் வருவாயை மதிப்பீடு செய்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிய இது வகை செய்கிறது. இந்த வழிகாட்டுதல் குழு கொல்கத்தாவில் உள்ள  இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர்  டாக்டர் மவுசுமி போஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேசிய புள்ளியியல் ஆய்வு மற்றும் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

மதிப்பீடுகள் செய்யும் முறை குறித்த விரிவான விவரங்கள் மற்றும் பயனாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அந்த அமைச்சகத்தின் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196833&reg=3&lang=1

***

SS/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2197135) आगंतुक पटल : 62
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी