புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய குறியீடுகள் மற்றும் தரவரிசைகள் மேம்பாட்டிற்கான புள்ளியியல் வழிமுறைகள்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 1:51PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தொகுத்து வெளியிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு, மாதாந்தர நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் மாதாந்தர தொழில்துறை உற்பத்திக் குறியீடு போன்ற பல்வேறு குறியீடுகள் குறித்த தரவு தொகுப்புகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. இந்த மதிப்பீடுகளுக்கான அடிப்படை ஆண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைக்கப்படுகிறது. இவை சர்வதேச வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு மாற்றியமைக்கப்படுகிறது. 

அண்மையில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்துவது மற்றும் தரவுத் தொகுப்பிற்கான கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஆகியவை குறித்தும் இந்த வழிமுறைகள் விரிவாக வழிகாட்டுகின்றன. மேலும் குறிப்பிட்ட சில துறைகளின் வளர்ச்சிக் குறித்த சர்வதேச  குறியீடுகளைக் கண்காணித்து அதற்கு ஏற்ப மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த குறியீடுகளுடன் கணக்கீடு செய்வதற்கு உதவுகிறது. இந்த 26 முக்கிய சர்வதேச குறியீடுகளை 16 சர்வதேச முகமைகள் வெளியிடுகின்றன்

இந்தத் தகவலை மாநிலங்களவையில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196832&reg=3&lang=1

***

SS/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2197128) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu