தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஹரியானாவின் ஜிந்தில் உள்ள நர்வானா சிவில் மருத்துவமனையின் பிணவறையில் உடல்களை எலிகள் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
01 DEC 2025 12:16PM by PIB Chennai
ஹரியானாவின் ஜிந்தில் உள்ள நர்வானா சிவில் மருத்துவமனையின் பிணவறையில் ஓர் உடலை எலிகள் கடித்துவிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த மருத்துவமனையில் பதிவான முதல் சம்பவம் இதுவல்ல என்றும் கூறப்படுகிறது.
செய்திகளின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், மனித உரிமைகள் மீறல் தொடர்பான கடுமையான பிரச்சனைகளை எழுப்புவதாக ஆணையம் கவனித்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு ஹரியானா அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2025, நவம்பர் 12 அன்று வெளியான ஊடக அறிக்கையின்படி, பிணவறையின் குளிர்பதனப் பெட்டியைப் பழுதுபார்ப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இருப்பினும், பிணவறையின் குளிர்பதனப் பெட்டியில் எலிகள் நுழைவதைத் தடுக்க தற்காலிக நடவடிக்கையாக ஒரு வலை பொருத்தப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
***
(Release ID: 2196792)
SS/SMB/RJ
(रिलीज़ आईडी: 2196931)
आगंतुक पटल : 6