56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஹேசம் ஃபரஹ்மண்ட் & டோனிஸ் பில் ஆகியோருக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது இரண்டு சிறந்த அறிமுக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஈரானிய திரைப்படமான ‘மை டாட்டர்ஸ் ஹேர்’ படத்திற்காக ஹேசம் ஃபராமண்ட் மற்றும் எஸ்டோனிய திரைப்படமான ‘ஃபிராங்க்’ படத்திற்காக டோனிஸ் பில் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த இரண்டு திரைப்படங்களும் தொலைநோக்குப் பார்வை மற்றும் கைவினைத்திறனில் தனித்து நின்றன. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற திரைப்பட விழாவில் அறிமுக சினிமாவை வரையறுக்கும் வலிமை, குரல் மற்றும் உணர்வுகளின் தெளிவான பார்வையை ஒருசேரக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்த விருதை பெற்றுள்ள வெற்றியாளர்களுக்கு "வெள்ளி மயில் கோப்பை", சான்றிதழ் மற்றும் 10,00,000 ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. இந்த விருதை கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் இணைந்து வழங்கினர். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழுத் தலைவர் திரு ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் விழா இயக்குநர் திரு சேகர் கபூர் ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196164
***
AD/SV/RJ
रिलीज़ आईडी:
2196437
| Visitor Counter:
5