பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நிர்வாகங்கள் ஆயுதப்படைகளுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டன: லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 29 NOV 2025 2:07PM by PIB Chennai

பொதுமக்கள் - ராணுவம் இணைந்து செயல்பட்டதற்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. பொதுமக்களிடம் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் நிர்வாக இயந்திரங்கள் ஆயுதப்படைகளுடன் தடையின்றி செயல்பட்டன: லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் இளம் அரசு ஊழியர்கள் தங்களது முக்கிய பங்களிப்பு குறித்து புரிந்து கொள்ள வேண்டும்; துணிச்சலான வீரர்களைப் போலவே, அவர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொவதற்குத் தயாராக இருக்க வேண்டும்

பொதுமக்கள் - ராணுவம் இணைந்து செயல்பட்டதற்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்றும், அங்கு நிர்வாக இயந்திரம் ஆயுதப்படைகளுடன் முக்கிய தகவல்களைப்  பகிர்ந்து கொள்வதற்கும், பொதுமக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும் தடையின்றி செயல்பட்டது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்ராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் 2025 நவம்பர் 29 அன்று நடைபெற்ற 100 -வது பொது அறக்கட்டளை பாடநெறியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இளம் அரசு ஊழியர்கள் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் தங்களது முக்கிய பங்களிப்பு குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும், துணிச்சலான வீரர்களைப் போலவே, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததாகவும், ஆனால் அண்டை நாட்டின் தவறான நடத்தையே எல்லையில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கவில்லை என்றும் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். வீரர்களின் துணிச்சலுக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், நிர்வாக அதிகாரிகள் முக்கியதத்துவம் வாய்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக, நாடு முழுவதும் போர் ஒத்திகைப் பயிற்சிகளை வெற்றிகரமாக நடத்த முடிந்ததாக அவர் கூறினார். 2047 -ம் ஆண்டிற்குள்  இந்தியாவை ஒரு சிறந்த நாடக உருவெடுக்கச் செய்வதற்கு, ஆட்சிக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' மற்றும் 'சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்' என்ற தாரக மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் அரசு ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196265

***

AD/SV/RJ


(रिलीज़ आईडी: 2196423) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Telugu