பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரை எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை: பாதுகாப்புத்துறை அமைச்சர்
प्रविष्टि तिथि:
28 NOV 2025 1:08PM by PIB Chennai
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவை மாறிவரும் உலகளாவிய சூழலில் சமநிலை மற்றும் பொறுப்புணர்வு மிக்க நாடுகளின் குரலாக மாறியுள்ளன என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுதில்லியில் 2025 நவம்பர் 28 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்தோ-பசிபிக் மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவை நம்பகமான நட்பு நாடாகக் கருதுகின்றன," என்று தெரிவித்தார்.
இந்தியா இன்றைய சூழலில் உலகளாவிய விவாதங்களை பொறுப்புணர்வு, உத்திசார் தன்னாட்சி மற்றும் நாகரிக விழுமியங்களில் வேரூன்றிய நம்பிக்கையுடன் வடிவமைத்து வருகிறது. மேலும் இந்தியா மீதான நன்மதிப்பு, உலக நாடுகளின் நம்பிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது என்றும், புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகள், நாடுகளின் இறையாண்மை மற்றும் விதிகள் சார்ந்த ஒழுங்கமைப்பிற்கு மதிப்பளித்து செயலாற்றுவதே அதன் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
பயங்கரவாதம், எல்லை தாண்டிய தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவு, தற்போதைய நிலையை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தகவல் போர் போன்ற புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் மற்றும் சவால்களுக்கு உறுதியான விழிப்புணர்வு மற்றும் தெளிவு நோக்கங்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். சீர்திருத்த நடவடிக்கைகள் தேர்வை விட ஒரு உத்திசார் தேவையாக மாறி வருகின்றன என்றார். சீர்திருத்தங்கள் நிறுவனங்களின் தகவமைப்புத் திறனை வலுப்படுத்துவதுடன், ஆயுதப்படைகளின் செயல்திறனையும் மேம்படுத்துகின்றன. மேலும் வலிமையான, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை திரு ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195762
(Release ID:2195762)
****
AD/SV/SH
(रिलीज़ आईडी: 2196154)
आगंतुक पटल : 5