PIB Headquarters
azadi ka amrit mahotsav

8.2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி: இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி

प्रविष्टि तिथि: 28 NOV 2025 6:17PM by PIB Chennai

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வலுவான வளர்ச்சி, நிலையான பணவீக்க விகிதம், வலுவான உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் ஏற்றுமதி ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க உதவுகின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் 8.2 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், முதலாவது அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 8 சதவீத  வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2024 - ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபர் (2025) மாதத்தில், நுகர்வோர் விலைக் குறியீடு 0.25 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது தற்போதைய நுகர்வோர் விலைக் குறியீட்டு வரிசையில் மிகவும் குறைவான பணவீக்க விகிதமாகும்.

உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள 4.8 சதவீத வளர்ச்சி காரணமாக, தொழில்துறை உற்பத்திக் குறியீடு 2025- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆண்டுதோறும் 4.0 சதவீத அளவிற்கு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது.

தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் ஆறு மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து, 2025 அக்டோபர் மாதத்தில் 55.4 சதவீதத்தை எட்டியது.

2024 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 2025-ம் ஆண்டில் 4.84 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ள இந்தியா, 2030 -ம் ஆண்டிற்குள்  மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார வளர்ச்சி, தீர்க்கமான கொள்கைகளை வகுத்தல், கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் வலுவான ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் அதன் வலிமையை பிரதிபலிப்பதாக உள்ளது.

விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் காரணமாக, உலகளவிலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் இந்தியா மீண்டும் விரைவான பொருளாதார நாடாக முன்னேறி வருகிறது. நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய உள்நாட்டு தேவை, பணவீக்கத்தைக் குறைத்தல் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர் பங்கேற்பு ஆகியவை காரணமாக, உள்நாட்டு முதலீட்டில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் வலுவான நம்பிக்கை  உணர்வு ஒரு நிலையான மற்றும் பரந்த அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பதாக உள்ளது. சீர்திருத்த நடவடிக்கைகள் உத்வேகம் பெற்று, நுகர்வு கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பதால், இந்தியாவின் பொருளாதாரக் கண்ணோட்டம் தொடர்ந்து உற்சாகமான நிலையில் உள்ளது. இது பல்வேறு துறைகள் முழுவதும் சீரான வேகத்தையும், வளர்ச்சியையும் குறிக்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒட்டுமொத்த பொருளாதார செயல்திறனின் முதன்மை குறியீடுகளில் ஒன்றாகும். இது நாடு விரிவடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட இந்தியாவின் நிகழ்நேர உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம், 2024-25 -ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 5.6% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், 2025-26 -ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 8.2% வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 -ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.5% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், 2025-26 -ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. 2025-26 -ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பெயரளவு உள்நாட்டு மொத்த உற்பத்தி 8.7% வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. 2025-26 -ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், முதன்மையான துறைகளில் ஆண்டுதோறும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல், இரண்டாவது (8.1%) மற்றும் மூன்றாவது நிலையில் உள்ள துறைகளின் வளர்ச்சி விகிதம் (9.2%)மாக உள்ளது. 2025-26 -ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.

***

AD/SV/SH


(रिलीज़ आईडी: 2196053) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी