PIB Headquarters
நவீன நிதிசார் சேவைகள், நவீன எதிர்காலம்: கிப்ட் சிட்டி
प्रविष्टि तिथि:
28 NOV 2025 11:50AM by PIB Chennai
உலகத் தரம் வாய்ந்த நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப மையத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் துணிச்சலான ஒரு நடவடிக்கையாக கிப்ட் நகரம் திகழ்கிறது. தொலைநோக்குப் பார்வை மற்றும் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட இந்த மையம், சர்வதேச அளவிலான தரநிலைகளை நீடித்த புதுமைக் கண்டுபிடிப்புகளுடன் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி (கிப்ட் சிட்டி) என்பது, குஜராத் மாநிலம் காந்திநகரில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் சர்வதேச நிதி சேவைகள் மையம் ஆகும். நாட்டின் முதலாவது செயல்பாட்டு மையமாகவும், நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்கான உலகளாவிய மையத்தை உருவாக்குவதற்கான நாட்டின் லட்சியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. மத்திய அரசின் வலுவான ஆதரவுடன், கிப்ட் சிட்டி உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை நீடித்த நகர்ப்புற மேம்பாட்டுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிதி மற்றும் முதலீட்டில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்களிப்பின் அடையாளமாகவும் இந்த மையம் நிற்கிறது. இன்று, இந்த மையம் உலகளாவிய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், சொத்து உருவாக்க மேலாளர்கள் மற்றும் நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவிடும் மையமாகவும் உள்ளது. இது சிங்கப்பூர், துபாய் போன்ற சர்வதேச மையங்களுக்கு வளர்ந்து வரும் போட்டியாளராக உருவெடுத்து வருகிறது. வணிக மாவட்டம், பிரத்யேக குடியிருப்பு மண்டலங்கள், வலுவான சமூக உள்கட்டமைப்பு, சில்லறை விற்பனை மற்றும் பொழுதுபோக்கு மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை இந்த நகரம் கொண்டுள்ளது.
இந்தியாவின் முதலாவது சர்வதேச நிதி மையத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையில் இருந்து கிப்ட் சிட்டி என்ற கருத்தாக்கம் உருவானது. நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் உலகத் தரம் வாய்ந்த தர நிலைகளை உறுதி செய்ய வேண்டும் என்ற நாட்டின் லட்சியத்தை இது பிரதிபலிப்பதாக உள்ளது. சர்வதேச நாடுகளின் முதலீடுகள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக கிப்ட் சிட்டி கருதப்படுகிறது. நிலைத்தன்மை மற்றும் நிதிசார் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு, 2047 - ம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகின் முன்னணி நிதிசார் மையமாக நிலைநிறுத்துவதே அதன் நீண்டகால இலக்காக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195725
***
SS/SV/KR
(रिलीज़ आईडी: 2195796)
आगंतुक पटल : 4