இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 7-வது நாளில் திரைப்பட விமர்சனம், ஆடை வடிவமைப்பு மற்றும் விஎப்எக்ஸ் கவனம்பெற்றன
56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் 7வது நாளில், திரைப்படத் தயாரிப்பின் படைப்பு, விமர்சனம் மற்றும் தொழில்நுட்ப பரிமாணங்களை ஆராயும் மூன்று முக்கிய விவாதங்கள் நடைபெற்றன.
திரைப்பட விமர்சகரின் பங்கு: சமூக ஊடகச் சூழல் மற்றும் ஏஐ உள்ளடக்கம் மத்தியில், விமர்சகர்கள் எவ்வாறு வாயில்காப்பாளர்கள் மற்றும் கலாச்சார மத்தியஸ்தர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதை ஒரு வட்டமேசை விவாதித்தது. சுதந்திரமான திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நம்பகமான விமர்சனங்களின் முக்கியத்துவத்தை பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.
ஆடை மற்றும் கதாபாத்திரம்: ஆடை வடிவமைப்பு ஒரு கதாபாத்திரத்தின் அடையாளம், உணர்ச்சிப் போக்கு மற்றும் கதை மீதான தாக்கத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை இந்த விவாதம் ஆராய்ந்தது. ஆடை வடிவமைப்பாளர்கள் நிறம் மற்றும் பாணியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை நிபுணர்கள் விளக்கினர்.
விஎப்எக்ஸ் தயாரிப்பு: விஎப்எக்ஸ் முன்னோடியான பீட் ட்ரேப் அவர்கள், முழுமையான விசுவல் எஃபெக்ட்ஸ் செயல்முறைகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார். 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' போன்ற படங்களின் அனுபவங்களைப் பயன்படுத்தி, பெரிய அளவிலான சினிமா காட்சிகளை உருவாக்குவது குறித்த வழிகாட்டுதலை அவர் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194999
***
(செய்தி வெளியீட்டு எண் 2194999)
AD/VK/KPG/KR
Release ID:
2195294
| Visitor Counter:
3