பாதுகாப்பு அமைச்சகம்
பிலிப்பைன்ஸின் மணிலா துறைமுகத்தில் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி
प्रविष्टि तिथि:
27 NOV 2025 10:19AM by PIB Chennai
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட போர்க்கப்பலான இந்திய கடற்படையின் (ஐஎன்எஸ்) சஹ்யாத்ரி, பிலிப்பைன்ஸின் மணிலாவில் துறைமுகப் பயிற்சிக்காக சென்றடைந்துள்ளது.
இந்தக் கப்பல் தற்போது இந்தோ-பசிபிக் பகுதியில் செயல்பாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. நட்பு நாடுகளுடன் பல்வேறு பலதரப்பு மற்றும் இருதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளது. இதில் மலபார்-2025, ஆசின்டெக்ஸ்-2025, ஜெய்மெக்ஸ்-25, மற்றும் கொரிய குடியரசு கடற்படையுடன் முதல் இருதரப்பு பயிற்சி ஆகியவை அடங்கும்.
இந்தப் பயிற்சியின் போது, இரு கடற்படைகளும் வியூகத் தகவல் தொடர்பு பயிற்சிகள், வழிசெலுத்தல் வியூகங்கள், தேடுதல் மற்றும் பறிமுதல் (விபிஎஸ்எஸ்) பயிற்சிகள் மற்றும் தொழில்முறை ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர புரிதலைச் செம்மைப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொண்டன.
துறைமுக வளாகத்தில் தொடர்ச்சியான தொழில்முறை பரிமாற்றங்கள், தள வருகைகள் மற்றும் நிபுணத்துவ பரிமாற்றங்களை இந்திய கடற்படை கப்பல் மேற்கொள்ளும். கூடுதலாக, நட்பு விளையாட்டு, கூட்டு யோகா அமர்வு மற்றும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவி போன்ற கலாச்சாரத் தொடர்புகளும் இந்த வருகையின் போது திட்டமிடப்பட்டுள்ளன.
ஐஎன்எஸ் சஹ்யாத்ரியின் வருகை பிலிப்பைன்ஸுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் கடல்சார் களத்தில் இரு கடற்படைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் ஆக்ட் ஈஸ்ட் பாலிசி மற்றும் சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, முக்கியமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு படியாகவும் இது அமைகிறது.
***
SS/PKV/KPG/KR
(रिलीज़ आईडी: 2195251)
आगंतुक पटल : 30