திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சீன தைபேயில் நடைபெறும் உலகத் திறன்கள் ஆசியப் போட்டியில் இந்தியக் குழு பங்கேற்பு

Posted On: 24 NOV 2025 2:54PM by PIB Chennai

சீன தைபேயில் 2025 நவம்பர் 27 முதல் 29-ம் தேதிவரை நடைபெறும்  உலக திறன்கள் ஆசியப் போட்டி 2025-ல் பங்கேற்கும் இந்திய குழுவினரை, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் இன்று வழியனுப்பி வைத்தது.

உலக திறன்கள் ஆசிய தளத்தில் முதன்முறையாக இந்தியா பங்கேற்பது, நாட்டின் உலகளாவிய திறன்கள் பயணத்திற்கான மகத்துவம் மிக்க மைல்கல்லை குறிக்கிறது.

இந்நிகழ்ச்சியில் மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த ஆண்டு நடைபெறும் இப்போட்டியில், சுமார் 40 ஆசிய நாடுகள் மற்றும் விருந்தினர் நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், 38 திறன் பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.

தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைமையிலான இந்தியக் குழுவில் 23 போட்டியாளர்களும், 21 நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 21 திறன் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஜெயந்த் சௌத்ரி, உலக திறன்கள் ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இளம் போட்டியாளர்கள், உலகளாவிய திறன்களில் தலைமைத்துவமாக இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். பல மாதங்கள் மேற்கொண்ட கடுமையான பயிற்சி, நிபுணர்களின் வழிகாட்டுதல் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஆதரவளித்த தங்கள் துறையின் திறன் குழுமங்கள், அமைச்சகம் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களின் பெரும் ஆதரவு ஆகியவற்றால் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193530

***

SS/IR/LDN/SH


(Release ID: 2193750) Visitor Counter : 5