பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா – ஓமன் இடையே 13-வது கூட்டு ராணுவ ஒத்துழைப்புக் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
प्रविष्टि तिथि:
24 NOV 2025 5:52PM by PIB Chennai
இந்தியா – ஓமன் இடையேயான 13-வது கூட்டு ராணுவ ஒத்துழைப்புக் குழு கூட்டம் புதுதில்லியில் 2025 நவம்பர் 24 அன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், ஓமன் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் முகமது பின் நசீர் பின் அலி அல் ஜாபி ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.
இரு நாடுகளுக்கிடையேயான உறுதியான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ஆய்வுசெய்து பாராட்டு தெரிவித்தனர். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு மேம்பாடு குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்தும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
பாதுகாப்புத் தளவாட உற்பத்தி தொழில்துறையில் மேலும் ஒத்துழைப்பதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193653
AD/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2193698)
आगंतुक पटल : 8