வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இஸ்ரேலுடன் உத்திசார் ஒத்துழைப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்னெடுத்துள்ளார்

प्रविष्टि तिथि: 22 NOV 2025 12:44PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இஸ்ரேலுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது விவசாயம், தொழில்நுட்பம், புதுமை, வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகளை மேற்கொண்டார்.

நவம்பர் 21 அன்று நடந்த கூட்டங்களின் போது, விவசாயத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த விரிவான கலந்துரையாடலுக்காக திரு பியூஷ் கோயல், இஸ்ரேலிய வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் திரு. அவி டிச்சரை சந்தித்தார். இஸ்ரேலின் 25 ஆண்டுகால உணவுப் பாதுகாப்புத் திட்டம், அதன் மேம்பட்ட விதை மேம்பாட்டு உத்திகள் மற்றும் விவசாயத்திற்கான நீர் மறுபயன்பாட்டு தொழில்நுட்பங்களில் நாட்டின் உலகளாவிய தலைமைத்துவம் குறித்து அமைச்சர் டிச்சர்திரு கோயலுக்கு விளக்கினார்.

பின்னர்  திரு கோயல், பெரெஸ் அமைதி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தைப் பார்வையிட்டார், அங்கு இஸ்ரேலின் முன்னோடி தொழில்நுட்ப சூழல் அமைப்பு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. சொட்டு நீர்ப் பாசன அமைப்புகள், ஸ்டென்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் அயர்ன் டோம் அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிவேக  தீர்வுகள் பற்றிய விளக்கங்களுடன் அவருக்குக் விளக்கப்பட்டன. பெரெஸ் மையத்தை இஸ்ரேலின் படைப்பாற்றல், புதுமை மற்றும் சமூக தாக்கத்தின் பயணத்தை பிரதிபலிக்கும் ஒரு ஊக்கமளிக்கும் நிறுவனம் என்று அவர் விவரித்தார்.

முன்னதாக, நவம்பர் 20 அன்று, திரு பியூஷ் கோயல் இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் திரு. நிர் பர்கட் அவர்களை சந்தித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு வர்த்தகத்தின் தற்போதைய பாதையை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா-இஸ்ரேல் வணிக மன்றம் நடைபெற்றது, இதில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மன்றத்தில் தொழில்நுட்ப அமர்வுகள்  இடம்பெற்றன, அவை தொழில்நுட்பம், புதுமை, விவசாயம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் தனியார் துறையின் வலுவான ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன. தனது உரையின் போது, இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் நம்பிக்கை அடிப்படையிலான அடித்தளத்தை திரு கோயல் வலியுறுத்தினார்

திரு கோயல், இஸ்ரேலின் நிதியமைச்சர் திரு. பெசலெல் ஸ்மோட்ரிச்சுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்தினார், அங்கு முதலீட்டு இணைப்புகளை வலுப்படுத்துதல், நிதி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் வலுவான பொருளாதார பரிமாற்றங்களை எளிதாக்க ஒழுங்குமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

இந்த பயணத்தின் போது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான குறிப்பு விதிமுறைகளில் கையெழுத்தானது. இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர், மேலும் பேச்சுவார்த்தைகள் ஒரு சமநிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தத்தை நோக்கி ஆக்கப்பூர்வமாக தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

திரு. கோயல் முன்னணி இஸ்ரேலிய ஊடகங்களுடனும், டைமண்ட் சமூகத்தின் உறுப்பினர்களுடனும் உரையாடினார், இது இந்தியா-இஸ்ரேல் வர்த்தக உறவுகளின் ஒரு மூலக்கல்லாக தொடர்ந்து செயல்படுகிறது. பின்னர் அவர் அமைச்சர் பர்கத்துடன் இந்தியா-இஸ்ரேல் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பங்கேற்றார், அங்கு அவர் இருதரப்பு பொருளாதார கூட்டாண்மையின் மீள்தன்மை, ஆழம் மற்றும் வளர்ந்து வரும் திறனை விளக்கினார்.

திரு. பியூஷ் கோயலின் சந்திப்புகள், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தவும், தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தியா மற்றும் இஸ்ரேலின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலித்தன.

***

(Release ID: 2192819)

AD/PKV/RJ


(रिलीज़ आईडी: 2192934) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी