அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி மருத்துவம் மற்றும் அணியக்கூடிய சென்சார்களுக்காக உருவாக்கப்பட்ட நெகிழ்வான பைசோஎலக்ட்ரிக் நானோகாம்போசிட்டுகள்
प्रविष्टि तिथि:
21 NOV 2025 12:05PM by PIB Chennai
நானோ பொருளின் பாலிமர் நானோகாம்போசிட்டைப் பயன்படுத்தி ஒரு புதுமையான பைசோ எலக்ட்ரிக் சாதனம் உருவாக்கப்பட்டது, இது நெகிழ்வான, அணியக்கூடிய, மிகவும் திறமையான, அழுத்தத்தை உணரும் சாதனங்களை உருவாக்குவதற்கான ஒரு சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.
இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது எப்போதும் மிகுந்த ஆர்வமுள்ள ஒரு விஷயமாகும். ஏனெனில் இது அன்றாடச் செயல்பாடுகளை பயனுள்ள ஆற்றலாக மாற்றுவதை உள்ளடக்கியது. அதனால், ஆராய்ச்சியாளர்கள் அதற்கான புதிய முறைகளைத் தேடுகிறார்கள்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான பெங்களூருவில் உள்ள நானோ அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் பாலிமர்கள் மற்றும் நானோ பொருட்களுக்கு இடையிலான தொடர்புகளை ஆராய ஒரு முறையான சோதனை அணுகுமுறையைப் பயன்படுத்தினர்.
இதில், நெகிழ்வான பைசோஎலக்ட்ரிக் பாலிமர் மற்றும் நானோ துகள்களின் கலவை மற்றும் அதன் விளைவாக வரும் இயந்திர ஆற்றல் மாற்றச் செயல்திறனை முறையாக ஆய்வு செய்தல் ஆகியவை அடங்கும். ஆராய்ச்சி, பைசோஎலக்ட்ரிக் பாலிமரின் பைசோ எலக்ட்ரிக் பண்புகளை எந்த வகையான நானோ துகள் மேம்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்வதுடன், அதனை வகைப்படுத்துவது பற்றிய நுண்ணறிவை இது வழங்குகிறது.
மேலும் விரிவான விரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும். https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192413
***
AD/PKV/SH
(रिलीज़ आईडी: 2192713)
आगंतुक पटल : 13