சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
செம்மரங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ரூ.38 கோடி நிதி விடுவித்துள்ளது
प्रविष्टि तिथि:
21 NOV 2025 8:59AM by PIB Chennai
இந்தியாவின் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் வனத்துறைக்கு தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் 38.36 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. செம்மரங்களை பாதுகாப்பதற்காக அம்மாநில பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு, 1.48 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல்லுயிர் பெருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக பரஸ்பரம் பயன்பாட்டு பகிர்மானத்தின் அடிப்படையில் இதுவரை 110 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
செம்மரங்கள் உலக அளவில் பிரபலமானதும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இயற்கையாக வளரக்கூடியவையாகும். குறிப்பாக அனந்த்பூர், சித்தூர், கடப்பா, பிரகாசம் மற்றும் கர்னூல் மாவட்டங்களில் செம்மரங்கள் உள்ளன. ஆந்திர மாநில வனத்துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட அல்லது ஏலம் விடப்பட்ட செம்மரக்கட்டைகள் மூலம் 87.68 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதுவரை தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறைக்கும், ஆந்திர மாநில பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கும் செம்மரங்களைப் பாதுகாப்பதற்காக 49 கோடி ரூபாய்க்கும் கூடுதலான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 198 விவசாயிகளுக்கு 3 கோடி ரூபாய் நிதியுதவியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 விவசாயிகளுக்கு 55 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192377
----
AD/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2192476)
आगंतुक पटल : 57