திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது - மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி
Posted On:
20 NOV 2025 6:14PM by PIB Chennai
ஹைதராபாத்தில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சரக்குப் போக்குவரத்து தொடர்பான உயர் சிறப்புப் பயிற்சி மையத்தை மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி இன்று (20-11-2025) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை, பிரதமர் விரைவு சக்திப் பெருந்திட்டம், உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத முதலீடுகள் ஆகியவை காரணமாக நாட்டின் சரக்குப் போக்குவரத்துத் துறை வேகமான வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும் வரும் பத்து ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினார். அதற்கு ஏற்ற வகையில் இத்துறையில் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர் சிறப்பு சரக்குப் போக்குவரத்துப் பயிற்சி மையம், அடுத்த தலைமுறைக்குத் தேவையான திறன் மேம்பாட்டை வழங்கும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192215
(Release ID: 2192215)
SS/PLM/KPG/SH
(Release ID: 2192335)
Visitor Counter : 5