சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதில் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள் அவசியமாகும் - மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

Posted On: 20 NOV 2025 7:55AM by PIB Chennai

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதில் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள் அவசியமாகும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வளரும் நாடுகளில்  இதற்கான முயற்சிகள் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்

நீடித்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் பரஸ்பரம் நம்பிக்கை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்றவற்றில் இந்தியா – ஜப்பான் நாடுகளிடையே நீண்ட கால உறவுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா – ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி தெளிவான கொள்கைகள் வரையறைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். குறைவான கார்பன் உமிழ்வை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளின் கூட்டமைப்பு உதவி வருவதாக அவர் தெரிவித்தார். கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான முதலீடுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் இன்றியமையாதது என்பதை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191915

***

VL/SV/KPG/KR

 


(Release ID: 2192198) Visitor Counter : 5