PIB Headquarters
azadi ka amrit mahotsav

உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது

Posted On: 20 NOV 2025 10:29AM by PIB Chennai

உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் 2024-25-ம் நிதியாண்டில் 1.54 லட்சம் கோடி ரூபாய் அளவில் உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. வரும் 2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தவும் ஏற்றுமதியில் 50,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதுடன் உலக அளவில் பாதுகாப்புத் தளடவாட உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும். வரும் ஆண்டுகளில் தற்சார்பு இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் உள்நாட்டு பாதுகாப்புத் தளவாடங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்.

உள்நாட்டு பாதுகாப்புத் தளவாடங்களின் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும் வகையில் 16,000 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. விரைவான வளர்ச்சிக் கண்டு வரும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள 462 நிறுவனங்களுக்கு 788 தொழில் துறை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி சார்ந்த அனுமதிகளுக்கென பாதுகாப்பு உற்பத்தித்துறை சார்பிலட் டிஜிட்டல் தளங்கள் ஏற்படுத்தப்பட்டு சீராக செயல்பட்டு வருகிறது. 2024-25-ம் நிதியாண்டில் இந்த டிஜிட்டல் தளத்தின் வாயிலாக 1762 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 17.4 சதவீதம் கூடுதலாகும்.

2024-25-ம் நிதியாண்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 2,09,050 கோடி ரூபாய் மதிப்பிலான 193 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது ஒரே ஆண்டில் அதிக அளவிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191937

***

VL/SV/KPG/KR


(Release ID: 2192186) Visitor Counter : 6