பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விண்வெளி மருத்துவ சங்கத்தின் 64-வது வருடாந்தர மாநாட்டை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ பி சிங் நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
19 NOV 2025 10:36AM by PIB Chennai
இந்திய விண்வெளி மருத்துவ சங்கத்தின் 64-வது வருடாந்தர மாநாட்டை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ பி சிங் நாளை 20.11.2025 தொடங்கி வைக்கிறார். பெங்களூருவில் உள்ள விண்வெளி மருத்துவ நிறுவனத்தில் 20 முதல் 21-ம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 300-க்கும் அதிகமான பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன ஆய்வகங்களிலிருந்து பிரபல விஞ்ஞானிகள் உட்பட இச்சங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து பல்வேறு ஆய்வாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் ஏர் மார்ஷல் சுப்ரத்தோ முகர்ஜி நினைவு சொற்பொழிவை, திரு அன்சித் குப்தாவும், துணை ஏர் மார்ஷல் எம் எம் ஸ்ரீநாகேஷ் நினைவு சொற்பொழிவை, ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல் தீபக் கவுர் ஆகியோரும் வழங்குகின்றனர்.
இந்த மாநாட்டில் 100-க்கும் அதிகமான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. விண்வெளி மருத்துவத்தில் எதிர்கால ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான நாட்டின் கொள்கை வரையறைகள், வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191513
**
AD/SV/KPG/KR
(Release ID: 2191635)
Visitor Counter : 14