இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தூய்மை சிறப்பு இயக்கம் 5.0-ல் மத்திய இளைஞர் நலத்துறையின் செயல்பாடு
प्रविष्टि तिथि:
18 NOV 2025 12:58PM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் முன்முயற்சிகளில் ஒன்றான தூய்மை சிறப்பு இயக்கம் 5.0-ல் மத்திய இளைஞர் நலத்துறைத் தீவிரமாக பங்கேற்றது. 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்ற இந்த இயக்கத்தில் தூய்மையை ஊக்குவித்தல், நிலுவையைக் குறைத்தல், நிர்வாகத்திறனை வளர்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த இயக்கத்தின் போது, இடநிர்வாக நடவடிக்கைகள் மூலம் 2,560 சதுரஅடி இடம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு விற்பனை செய்ததன் மூலம் 40,301 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. இந்தத் துறையின் கீழ் உள்ள நாட்டு நலப்பணித்திட்டம், மைபாரத் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளுக்கும் கள அலுவலர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட்டன.
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191122
***
SS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2191218)
आगंतुक पटल : 22