தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கட்டாய ஐஎம்இஐ பதிவு: மோசடிச் சாதனங்களைத் தடுக்க உற்பத்தியாளர்கள்,

இறக்குமதியாளர்களுக்குத் தொலைத்தொடர்புத் துறை கடுமையான எச்சரிக்கை

Posted On: 17 NOV 2025 2:34PM by PIB Chennai

இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வலிமையாக்கும் தொலைத்தொடர்பு சாதனங்களில் போலிகளைத் தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மத்திய தொலைத்தொடர்புத் துறை  ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சர்வதேச மொபைல் உபகரண அடையாளம் (ஐஎம்இஐ) எண் பதிவு செய்வது கட்டாயம் என்றும், அந்த எண்ணைத் திருத்துவது சட்டப்படி பெரிய குற்றமாகும் என்றும் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் மறுவிற்பனையாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சட்டம், 2023 மற்றும் தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பு விதிகள், 2024 ஆகியவற்றின் கீழ், ஐஎம்இஐ எண்களைத் திருத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத அல்லது திருத்தப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தும் சாதனங்களை அறிந்தே வைத்திருப்பதும் குற்றமாகும்.

இந்த விதிகளை மீறுபவர்களுக்குச் பிரிவு 42(7)-ன் படி, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்; மேலும் இவை பிணையில் வெளிவர முடியாத குற்றங்கள் ஆகும்.

எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஐஎம்இஐ கொண்ட சாதனங்களின் எண்களையும், விற்பனைக்கு முன்னரே சேது சாதனத்தில் இணையதளத்தில் மத்திய அரசிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190763

***

AD/VK/SH


(Release ID: 2191052) Visitor Counter : 4