ஜல்சக்தி அமைச்சகம்
அறிவியல் ரீதியாக நதி மேலாண்மையை வலுப்படுத்தும் முக்கிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் 67வது நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Posted On:
17 NOV 2025 3:00PM by PIB Chennai
தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் 67வது நிர்வாகக் குழு கூட்டம், தலைமை இயக்குநர் திரு ராஜீவ் குமார் மிட்டல் தலைமையில் நடைபெற்றது. மாசு குறைப்பு மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி, கங்கை நதியைப் புனரமைப்பு செய்வதற்கான பல்வேறு பிரச்சனைகள் குறித்து நிர்வாகக் குழு விவாதித்தது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நதிக்குப் பாதுகாப்பாகவும் சரியான முறையில் கொண்டு செல்வதன் மூலம் தில்லியில் யமுனையைப் புனரமைப்பு செய்வதிலும், தில்லியில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவும் நிர்வாகக் குழு கவனம் செலுத்தியது.
கங்கைப் படுகை முழுவதும் அறிவியல் புரிதல் மற்றும் தரவு சார்ந்த திட்டமிடலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, ஆராய்ச்சி அடிப்படையிலான நதி புனரமைப்புக்கு நிர்வாகக் குழு முக்கியத்துவம் அளித்தது. இந்த முயற்சிகள், முக்கியமான இமயமலை கங்கை முகத்துவார பனிப்பாறைகளைக் கண்காணித்தல் முதல் கங்கைக்கான டிஜிட்டல் இரட்டை மேம்பாடு மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட சோனார் அடிப்படையிலான நதிப்படுகை ஆய்வுகள், பேலியோசேனல்கள் வழியாக நிர்வகிக்கப்பட்ட நீர்நிலை நிரப்புதல் மற்றும் ஒரு வரலாற்று புவியியல் நதி தரவுத்தளத்தை உருவாக்குதல் வரை முக்கியமான பகுதிகளை உள்ளடக்கியது.
தலைநகர் தில்லிப் பிரதேசத்தில் உள்ள குறைந்தது 200 பள்ளிகளில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் பொறுப்பையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, ரூ. 39.37 லட்சம் மதிப்பிலான 'கங்கைக்காக இளைஞர்கள், யமுனைக்காக இளைஞர்கள்' என்ற முன்முயற்சிக்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் நதி இளைஞர் சங்கங்களை உருவாக்குதல், நீர் பயன்பாடு தொடர்பாக இளைஞர்களிடையே நேர்மறையான நடத்தை மாற்றங்களை ஊக்குவித்தல் மற்றும் நமாமி கங்கை பரவலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் ஆறு மாதங்களில் நிறைவடையும்.
இந்த ஒப்புதல்கள் மூலம், கங்கை புனரமைப்புப் பெறுவதற்கு அவசியமான மேம்பட்ட நீர் மேலாண்மை, கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அறிவியல் திறன்களுக்கு நிர்வாகக் குழு வழி வகுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190772
***
AD/SMB/SH
(Release ID: 2190995)
Visitor Counter : 6