பாதுகாப்பு அமைச்சகம்
சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2025-ன் முன்னோட்ட நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
17 NOV 2025 2:15PM by PIB Chennai
சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2025-ன் முன்னோட்ட நிகழ்ச்சியை, தரைவழி போர் முறை ஆய்வு மையத்துடன் இணைந்து, இந்திய ராணுவம் இன்று புதுதில்லியில் உள்ள மானக்ஷா மையத்தில் நடத்தியது. இந்த உரையாடல் நிகழ்வு “சீர்திருத்தத்தில் இருந்து மாற்றம்: வலுவான பாதுகாப்பான வளர்ச்சியடைந்த இந்தியா” என்ற கருப்பொருளில் 2025 நவம்பர் 27 முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்த முன்னோட்ட நிகழ்வில் சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2025 குறித்த காணொலிக் காட்சி வெளியிடப்பட்டது.
ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திரிவேதி இந்நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றினார். நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்து விவரித்த அவர், வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் விருப்பங்களுக்கு நிலையான நீடித்த தன்மை மற்றும் பாதுகாப்பான சூழல் தேவை என்று குறிப்பிட்டார். 2025-ஐ 'சீர்திருத்தங்களின் ஆண்டு' என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்ததை அவர் நினைவு கூர்ந்தார். மேலும் பாதுகாப்பும் வளர்ச்சியும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆபேரேஷன் சிந்தூரைப் பற்றி குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான நாட்டின் உறுதியை மீண்டும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முன்னாள் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவின் நீண்டகால தற்சார்பை வலுப்படுத்துவதில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்படும் மின்னணு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப சூழல்களின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190758
***
SS/IR/LDN/RK
(Release ID: 2190877)
Visitor Counter : 9