வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - யூரேசிய பொருளாதார யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து வர்த்தகத் துறைச் செயலாளர் ஆய்வு செய்தார்

Posted On: 16 NOV 2025 11:52AM by PIB Chennai

மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா-யூரேசிய பொருளாதார யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் ஆய்வு செய்தார். யூரேசிய பொருளாதார ஆணையத்தின் வர்த்தகப் பொறுப்புகளுக்கான அமைச்சர் திரு ஆண்ட்ரி ஸ்லெப்னேவ், ரஷ்ய தொழில் - வர்த்தகத் துறை துணை அமைச்சர் திரு மிகைல் யுரின் ஆகியோரையும் அவர் சந்தித்தார். மேலும் இந்திய - ரஷ்ய தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் அவர் உரையாற்றினார்.

வர்த்தகம் - பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா பணிக்குழுவின் முடிவுகளின் அடிப்படையில் இந்த விவாதங்கள் நடைபெற்றன. 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அமைச்சர் ஸ்லெப்னேவ் உடனான சந்திப்பின்போது, இந்தியா-யூரேசிய பொருளாதார யூனியன் இடையிலான தடையற்ற வர்த்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை வர்த்தகத் துறைச் செயலாளர் ஆய்வு செய்தார்.

துணை அமைச்சர் யுரினுடனான கலந்துரையாடல்களில், பன்முகத்தன்மை, விநியோகச் சங்கிலி, முக்கியமான கனிமங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

***

(Release ID: 2190478)

SS/PLM/RJ


(Release ID: 2190629) Visitor Counter : 5