சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தில்லியில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஓட்டத்தில் மத்திய இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா பங்கேற்பு - நமோ ஓட்டத்தை தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா தொடங்கி வைத்தார்
Posted On:
16 NOV 2025 12:15PM by PIB Chennai
சன்சத் கேல் மஹோத்சவ் 2025 எனப்படும் நாடாளுமன்ற தொகுதிகள் நிலையிலான விளையாட்டு விழாவின் ஒரு பகுதியாக, கிழக்கு தில்லியின் சூரஜ்மல் விஹாரில் உள்ள யமுனா விளையாட்டு வளாகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்த நமோ ஓட்டத்தை சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்து நடத்தினார். நமோ ஓட்டத்தை தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நமோ ஓட்டத்தில் 6000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சாலை விதிகளை மதித்து பொறுப்பான செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை இந்த ஓட்டம் வலியுறுத்தியதுடன், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதாக அமைந்தது. பள்ளி குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை பலரும் இதில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதில் உடல் பயிற்சி செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த ஓட்டம் உடற்பயிற்சியுடன் சாலைப் பாதுகாப்பை ஊக்குவித்துள்ளதாக அவர் கூறினார். இந்த நிகழ்வை ஒரு பெரிய வெற்றியாக மாற்றியதற்காக பங்கேற்பாளர்கள், பிரமுகர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா நன்றி தெரிவித்தார். இதில் தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190480
***
(Release ID: 2190480)
SS/PLM/RJ
(Release ID: 2190609)
Visitor Counter : 5