பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருடாந்திர ராணுவ பாரம்பரிய விழா - புதுதில்லியில் யுஎஸ்ஐ நடத்தியது

Posted On: 16 NOV 2025 3:02PM by PIB Chennai

இந்திய ஒருங்கிணைந்த சேவை நிறுவனமான யுஎஸ்ஐ, 2025 நவம்பர் 14, 15 ஆகிய நாட்களில் அதன் புதுதில்லி வளாகத்தில் மூன்றாவது வருடாந்திர இந்திய ராணுவ பாரம்பரிய விழாவை (ஐஎம்ஹெச்எஃப்) நடத்தியது. இதில் மூத்த ராணுவத் தளபதிகள், கொள்கை வகுப்பாளர்கள், வல்லுநர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்இந்த விழாவை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் செத் தொடங்கி வைத்தார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த விழா இந்தியாவின் ராணுவ பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஒரு தளமாக அமைந்தது. இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற விழாவில் லெப்டினன்ட் கர்னல் அருள் ராஜ் (ஓய்வு) வரைந்த ராணுவ ஓவியங்களின் கண்காட்சி இடம்பெற்றதுஅத்துடன் ஆயுதப்படையினரை கௌரவிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

ஆயுதப்படைகள் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 14-ம் தேதி நடைபெற்ற முதல் நாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190508      

***

(Release ID: 2190508)

SS/PLM/RJ


(Release ID: 2190593) Visitor Counter : 7