பிரதமர் அலுவலகம்
ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
15 NOV 2025 8:22AM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநிலம் முன்னேற்றத்தை விரும்பும் பழங்குடியினக் கலாச்சார வளமை கொண்ட ஒரு புகழ்பெற்ற நிலபரப்பாக உள்ளது என்று அவர் கூறினார். பகவான் பிர்சா முண்டாவின் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த புனித பூமியின் வரலாறு, துணிச்சல், போராட்டம் மற்றும் கண்ணியம் தொடர்பான உத்வேகம் அளிக்கும் பல்வேறு கதைகளால் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த சிறப்பு வாய்ந்த தருணத்தில், இம்மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் தொடர் முன்னேற்றம் மற்றும் வளமைக்கும் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பழங்குடியினர் கௌரவ தினம் என்ற இந்த புனிதமான நாளில், தாய்நாட்டின் பெருமையையும், கண்ணியத்தையும் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை, நாடு முழுவதும் நன்றியுடன் நினைவுகூர்கிறது என்று அவர் கூறினார்.
அந்நிய ஆட்சியின் அநீதிகளுக்கு எதிரான பகவான் பிர்சா முண்டாவின் போராட்டமும், தியாகமும், எதிர்காலத் தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகமளிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190250
(Release ID: 2190250)
***
SS/SV/SH
(Release ID: 2190313)
Visitor Counter : 5