சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் சட்ட விவகாரத் துறை பழங்குடியினர் கௌரவ இருவார விழாவை கொண்டாடுகிறது
Posted On:
14 NOV 2025 1:28PM by PIB Chennai
பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை பழங்குடியினர் கௌரவ தின இருவார விழாவை கொண்டாடுகிறது. புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், மரியாதைக்குரிய பழங்குடித் தலைவருமான பகவான் பிர்சா முண்டாவின் மரபு நீதி, கண்ணியம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான இந்தியாவின் கூட்டு அர்ப்பணிப்பை தொடர்ந்து இது வெளிக் காட்டுகிறது.
சட்டத்துறை செயலாளர் டாக்டர் அஞ்சு ரதி ராணாவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் தேசிய வரலாற்றை வடிவமைப்பதிலும், அதன் நீண்ட தேசக் கட்டமைப்பின் பயணத்திலும் பழங்குடி சமூகங்களின் ஆழ்ந்த பங்களிப்புகளைப் பிரதிபலித்தது. பகவான் பிர்சா முண்டாவின் அசாதாரண துணிச்சல், பழங்குடி சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது தலைமைத்துவம், காலத்தால் அழியாத அவரது மரபு ஆகியவை இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189947
***
SS/PKV/AG/SH
(Release ID: 2190166)
Visitor Counter : 3