உரங்கள் துறை
azadi ka amrit mahotsav

சீரான உர விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் உரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

Posted On: 13 NOV 2025 10:29AM by PIB Chennai

விவசாயிகளின் நலன் காக்கும் வகையிலும், தேசிய அளவில் உர விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலும், நடப்பு 2025-26 (ஏப்ரல் – நவம்பர்) ரபி மற்றும் காரீஃப் பருவத்தில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைளயுடன் இணைந்து உரத்துறை செயலாற்றி வருகிறது. கள்ளச்சந்தை, பதுக்கல் மற்றும் உரங்களை வேறு வகையில் திருப்பிவிடுதல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக மாநில அரசுகளுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உரவிநியோகம் குறித்து கண்காணிக்க நாடு முழுவதும் 3,17,054 ஆய்வுகளும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உரங்களை கள்ளச் சந்தையில் வைத்திருந்ததாக 5,119 பேருக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கைகள் அளிக்கப்பட்டன. இதில் 3,645 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தற்காலிகமாக முடக்கப்பட்டன. 418 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டது.  உரப்பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கையில், 667 பேருக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கைகள் அளிக்கப்பட்டது. 202 உரிமங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன.  37 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.  உரங்களை வேறு வகையில் திருப்பிவிட்டதற்காக 2,991 பேருக்கு விளக்கம் கேட்டு அறிக்கைகள் அளிக்கப்பட்டு 451 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தற்காலிகமாக முடக்கப்பட்டன. 92 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189508  

***

SS/IR/KPG/KR


(Release ID: 2189684) Visitor Counter : 6