PIB Headquarters
கடந்த 2024-25-ம் நிதியாண்டில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 597 மாணவர்கள் உயர்தேர்வுகளில் தேர்ச்சி
Posted On:
13 NOV 2025 10:53AM by PIB Chennai
கடந்த 2024-25-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 597 மாணவர்கள் ஜேஇஇ பிரதான தேர்வு, ஜேஇஇ அட்வான்ஸ் மற்றும் நீட் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த 2022-23-ம் ஆண்டில் இத்தேர்வுகளில் வெறும் இரண்டு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இச்சாதனை நாட்டின் பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி வாய்ப்பிற்கான ஆதரவை எடுத்துக் காட்டுகிறது.
இமாசலப்பிரதேசத்தின் பாஸ்பா பள்ளத்தாக்குப் பகுதியில் சங்லா கிராமத்தைச் சேர்ந்த ஜட்டின் நெகி, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 421-ம் இடம் பிடித்து தேர்ச்சிப் பெற்றார். தற்போது அவர், ஜோத்பூரில் ஐஐடி-யில் பிடெக் பயின்று வருகிறார். ஜேஇஇ பிரதான தேர்வில் 219 பேரும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் 34 பேரும், நீட் தேர்வில் 344 பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
பழங்குடியினர் நல அமைச்சகம் நடத்தும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கப்பட்டு அவர்கள் உயர்படிப்பு மற்றும் தொழில்கல்வி பயிலவும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெறவும் வழிவகை செய்யப்படுகிறது.
நாட்டில் உள்ள 485 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் கடந்த 2024-25-ம் ஆண்டில், 1,38,336 மாணவர்கள் சேர்ந்தனர். அந்த ஆண்டில் 722 பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவற்றுக்காக ரூ.68,418 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189515
***
SS/IR/KPG/KR
(Release ID: 2189683)
Visitor Counter : 4