கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பால சாகித்ய விருது நவம்பர் 14 அன்று புதுதில்லியில் வழங்கப்படுகிறது

தமிழில் ஒற்றைச் சிறகு ஓவியா என்ற புதினத்திற்காக திரு விஷ்ணுபுரம் சரவணனுக்கு விருது

प्रविष्टि तिथि: 12 NOV 2025 3:25PM by PIB Chennai

சாகித்ய அகாடமியின் பால சாகித்ய விருது 2025 வழங்கும் நிகழ்ச்சி புதுதில்லி திரிவேணி அரங்கில் 2025 நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ளது. இவ்விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் திரு மாதவ் கௌசிக் வழங்கவுள்ளார். பிரபல குஜராத்தி எழுத்தாளர் வர்ஷா தாஸ் தலைமை விருந்தினராக இதில் பங்கேற்க உள்ளார். சாகித்ய அகாடமியின் செயலாளர் பல்லவி பிரசாந்த் கோல்கர் வரவேற்புரை ஆற்றுகிறார். துணைத்தலைவர் திரு குமுத் சர்மா நன்றி உரையாற்றவுள்ளார். சிறந்த குழந்தை இலக்கியம் படைத்ததற்காக இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. 

தமிழில் ஒற்றை சிறகு ஓவியா என்ற புதினம் எழுதிய திரு விஷ்ணுபுரம் சரவணனுக்கு  இவ்விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவருக்கு தலா 50,000 ரூபாய் ரொக்கப்பரிசுக்கான காசோலையும் வெண்கலப் பட்டயமும் அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189173  

***

SS/IR/KPG/EA


(रिलीज़ आईडी: 2189336) आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu