பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"ஆதி சித்திரம்" - தர்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் தேசிய பழங்குடியின ஓவியக் கண்காட்சி

Posted On: 09 NOV 2025 6:49PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்திய அரசின் பழங்குடி விவகார அமைச்சகம், கலை, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மூலம் பழங்குடி சமூகங்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் அதிகாரமளிப்பை தொடர்ந்து மேம்படுத்துகிறது. இந்த உணர்வில், அமைச்சகம், இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு உடன் இணைந்து, "ஆதி சித்திரம்" என்ற ஒரு தேசிய பழங்குடி ஓவியக் கண்காட்சியை நடத்துகிறது.

தர்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நடைபெற்று வரும் பழங்குடியின கவுரவ ஆண்டு இருவார விழாவின்  (நவம்பர் 1–15, 2025)  ஒரு பகுதியாக, இந்த கண்காட்சி 2025 நவம்பர் 10-ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு மும்பையில் திறக்கப்படும்.

தொடக்க நிகழ்வில் மகாராஷ்டிர அரசின் பழங்குடி மேம்பாட்டு அமைச்சர் பேராசிரியர் டாக்டர் அசோக் உய்கே, மகாராஷ்டிர பழங்குடி மேம்பாட்டுத் துறை செயலாளர் மற்றும் பழங்குடி விவகார அமைச்சக இயக்குநர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.  இந்த ஒரு வாரகால கண்காட்சியை 2025 நவம்பர் 10 முதல் 16 வரை காலை 11:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:      https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188079

***

(Release ID: :2188079)

SS/BR/RK


(Release ID: 2189277) Visitor Counter : 7