தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேகாலயாவின் ஷில்லாங் நகர் மற்றும் கிழக்கு காசி மலைகள் மாவட்டத்தில் நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டை ட்ராய் மேற்கொண்டது

Posted On: 11 NOV 2025 11:54AM by PIB Chennai

மேகாலயாவின் ஷில்லாங் நகர் மற்றும் கிழக்கு காசி மலைகள் மாவட்டத்தில், செப்டம்பர் 2025-ல் நெட்வொர்க் தரம் குறித்து மேற்கொண்ட மதிப்பீட்டு அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பகுதிக்கு இயக்கச் சோதனை இந்த ஆணையத்தின் கொல்கத்தா பிராந்திய அலுவலக மேற்பார்வையில் நடத்தப்பட்டது. நகர்ப்புற பகுதிகள், நிறுவனங்கள் உள்ள முக்கியப் பகுதிகள், ஊரக குடியிருப்புப் பகுதிகள், சுற்றுலாப் பகுதிகள் போன்றவற்றில் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

2025 செப்டம்பர் 1 முதல் 5 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 269.4 கிமீ நகர்ப்புறப் பகுதியும் 9 நிறுவனம் சார்ந்த இடங்களும் அடங்கும். 1.6 கிமீ தூரத்திற்கு நடந்து சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி ஆகியவற்றின் தொழில்நுட்ப செயல்பாடு மதிப்பாய்வு செய்யப்பட்டது.

ஷில்லாங்கில் உள்ள சிறில் மருத்துவமனை, மேகாலயாவில் உள்ள சட்டப்பேரவை வளாகம் ஆகியவற்றில் முக்கியமான இடம் சார்ந்த நெட்வொர்க் சோதனையும் வார்டு ஏரி பகுதியில் நடந்து சென்று மேற்கொள்ளப்பட்ட சோதனையும் இதில் அடங்கும்.

இந்த சோதனைகளின் விரிவான அறிக்கை www.trai.gov.in என்ற ட்ராய் இணையதளத்தில் கிடைக்கும். கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கு கொல்கத்தா மண்டல அலுவலக ஆலோசகர் திரு கௌசிக் முகர்ஜியை adv.kolkata@trai.gov.in  என்ற மின்னஞ்சலில் அல்லது  +91-33-22361401 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188640

***

SS/SMB/KPG/RK


(Release ID: 2188685) Visitor Counter : 14