பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாக சீர்திருத்தங்கள், மக்கள் குறைதீர்ப்பு துறையின் 42-வது மாதாந்தர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Posted On: 10 NOV 2025 3:26PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள், மக்கள் குறைதீர்ப்பு துறை, மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் செயல்பாடுகளுக்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு  முறை குறித்த  42-வது மாதாந்தர (அக்டோபர் 2025) அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கை பொதுமக்கள் தெரிவித்துள்ள குறைகளின் வகைமைகள் பற்றிய பகுப்பாய்வையும், பைசல் செய்யப்பட்ட தன்மையையும் வழங்குகிறது.

2025 அக்டோபர் மாதத்தில்  மத்திய அமைச்சகங்கள் / துறைகளால் தீர்வு காணப்பட்ட 1,44,503 குறைகளை சுட்டிக்காட்டுகிறது. இவற்றுக்கான சராசரி பைசல் காலம் 15 நாட்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிகிராம்ஸ் போர்ட்டல் மூலம் 2025 அக்டோபரில் புதிய பயன்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ள விவரங்களை இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, பல்வேறு வழிகளில் மொத்தம் 52,876 புதிய பயன்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். பின்னூட்ட அழைப்பு மையத்தின் மூலம் 2025 அக்டோபரில் 65,197 பின்னூட்டங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பொதுசேவை மையங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட குறைகள் குறித்து மாநில வாரியான பகுப்பாய்வையும் இந்த அறிக்கை வழங்குகிறது. இந்த மாதத்தில் 12 ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

குறைதீர்ப்பு மதிப்பீட்டின்படி நிலவளங்கள் துறை, மத்திய நேர்முக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை, ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை குறைதீர்ப்பில் முதன்மையாக செயல்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188324

****

SS/SMB/AG/SH


(Release ID: 2188568) Visitor Counter : 4