அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையில் தூய்மை பணிகளுக்காக சிறப்பு இயக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
Posted On:
10 NOV 2025 3:10PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை அதன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பான அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் & மத்திய மின்னணுவியல் நிறுவனம் ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டது.
அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை நடைபெற்ற இந்த சிறப்பு தூய்மை இயக்கம், அறிவியில் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளர் டாக்டர் என் கலைச்செல்வியின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவ்வப்போது ஆய்வு செய்தார். இந்த ஒரு மாதகால தூய்மை இயக்கத்தில் மொத்தம் 146 தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதிலும் உள்ள மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சித் துறையின் கீழ் உள்ள ஆய்வகங்களில் இந்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188317
***
SS/SV/LDN/SH
(Release ID: 2188468)
Visitor Counter : 6