சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு சவுதி அரேபியா பயணம் - அந்நாட்டு அமைச்சர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவுடன் இருதரப்புப் பேச்சு
2026-ம் ஆண்டுக்கான இருதரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
09 NOV 2025 6:41PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு 2025 நவம்பர் 07 முதல் 09-ம் தேதி வரை மூன்று நாட்கள் சவுதி அரேபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார் . திரு கிரண் ரிஜிஜுவுடன் மத்திய அரசின் உயர்மட்டக் குழுவும் சென்றது . சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று (நவம்பர் 09, 2025) , மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவுடன் இருதரப்புப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, இரு அமைச்சர்களும் ஹஜ் புனிதப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். சுமூகமான, வசதியான புனிதப் பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் குறித்து இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி இந்தியாவிற்கான ஒதுக்கீடு 175,025 ஆக உறுதி செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தமது பயணத்தின் போது, ரியாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தினார். அமைச்சரின் இந்தப் பயணம், இந்தியா-சவுதி அரேபியா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188075
***
SS/PLM/RJ
(Release ID: 2188108)
Visitor Counter : 7