எரிசக்தி அமைச்சகம்
தேசிய நீர்மின் உற்பத்திக் கழகம் 51-வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது
Posted On:
08 NOV 2025 6:52PM by PIB Chennai
மத்திய அரசின் "நவரத்னா" நிறுவனமான தேசிய நீர்மின் உற்பத்திக் கழகம், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையும், அதன் 51 - வது நிறுவன தினத்தையும் நவம்பர் 7, 2025 அன்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது.
ஃபரிதாபாத்தில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமையகத்திலும், அதன் அனைத்து மண்டல அலுவலகங்கள், மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகியவற்றில் பிரமாண்டமான கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஃபரிதாபாத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொன்விழா கொண்டாட்டத்தில், தலைமை விருந்தினராக, மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் திரு மனோகர் லால், கலந்து கொண்டு மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அந்நிறுவனம் குறித்த "தனித்துவ முத்திரையை" வெளியிட்டார். இந்த நிறுவனத்தின் 50 ஆண்டுகால மகத்தான பயணத்தையும், அதன் முக்கிய சாதனைகள் குறித்தும் அறிந்துகொள்ளும் வகையில் "சாதனை புத்தகத்தையும்" அவர் வெளியிட்டார்.
தேசிய நீர்மின் உற்பத்திக் கழகத்தின் 51 - வது நிறுவன தினத்தை முன்னிட்டு நவம்பர் 7, 2025 அன்று ஃபரிதாபாத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் திரு. மனோகர் லால், ஹரியானா வட்டத் தலைமை அஞ்சலக அதிகாரி ஜெனரல் திரு. சச்சின் கிஷோர், ஆகியோரை நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான திரு பூபேந்தர் குப்தா, அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் திரு உத்தம் லால், திரு சஞ்சய் குமார் சிங் திரு சுப்ரகாஷ் அதிகாரி, திரு மகேஷ் சர்மா தலைமை வர்த்தக அதிகாரி திரு சந்தோஷ் குமார் மற்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட இயக்குநர்கள் ஆகியோர் பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய மின்சார ஆணையம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள், பல்வேறு மத்திய நிறுவனங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், இந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187845
***
AD/SV/RJ
(Release ID: 2187920)
Visitor Counter : 4