இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமித இடத்தை அளித்தது ஹாக்கி என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்
Posted On:
07 NOV 2025 3:46PM by PIB Chennai
இந்திய ஹாக்கியின் நூற்றாண்டு விழாவை இந்திய விளையாட்டு ஆணையமும், ஹாக்கி இந்தியா அமைப்பும் புதுதில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் சிறப்பாக இன்று (07.11.2025) கொண்டாடின. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், ஒடிசா மாநில விளையாட்டு மற்றும் இளையோர் சேவைத்துறை அமைச்சர் திரு சூர்யபன்ஷி சூரஜ், சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவர் டத்தோ தயாப் இக்ரம் மற்றும் ஹாக்கி விளையாட்டு ஆளுமைகள் தேசிய ஹாக்கி அணிகளின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் விளையாட்டுகளில் இந்தியாவின் சாதனை உலகுக்கு எடுத்துக்காட்டப்பட்டதாக மத்திய அமைச்சர் டாக்டர் மாண்டவியா தெரிவித்தார். அதன் வளமான வரலாற்றுடன் இந்திய ஹாக்கி அணி மற்றொரு ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கி முன்னேறி வருவதாக அவர் கூறினார். நாடு முழுவதும் இன்று ஆயிரத்திற்கும் அதிகமான ஹாக்கி போட்டிகளுடன் இந்த விழா கொண்டாடப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டுகளுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான விளையாட்டு அமைச்சக-11 அணிக்கும் டாக்டர் திலிப் திர்க்கே ஹாக்கி இந்தியா -11 அணிக்கும், இடையே இன்று நடைபெற்ற காட்சிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் விளையாட்டு அமைச்சக 11 அணி வெற்றி பெற்றது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் ஆடவர் ஜூனியர் உலக கோப்பை 2025 போட்டியை தமிழ்நாடு நடத்தவுள்ள நிலையில், அதற்கான கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது 20 நகர கோப்பை சுற்றுக்கான தொடக்கத்தை குறிப்பதாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2187337
***
AD/SMB/AG/RJ
(Release ID: 2187629)
Visitor Counter : 4