சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சட்டம் மற்றும் நீதித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த பிரிட்டன் நீதித்துறை குழுவினர் மத்திய சட்டத்துறை செயலாளரை சந்தித்தனர்
Posted On:
07 NOV 2025 1:09PM by PIB Chennai
சட்டம் மற்றும் நீதித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த பிரிட்டன் நீதித்துறை குழுவினரும் பிரிட்டிஷ் ஹைகமிஷன் அதிகாரிகளும், மத்திய சட்டத்துறை செயலாளரை புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் 2025 நவம்பர் 06 அன்று சந்தித்து பேசினர்.
பிரிட்டன் நீதித்துறை குழுவில் சர்வதேச திட்டங்கள் பிரிவு தலைவர் திரு டேவிட் மேயர், சர்வதேச சட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிறிஸ்டினா சோபெர், சட்டசேவைகளின் மூத்த கொள்கை ஆலோசகர் திரு பால் ஸ்காட் சர்வதேச செயல்பாட்டுக்கான மூத்த கொள்கை ஆலோசகர் திருமதி பார்போரா சிண்டரோவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
சட்ட வரைவு, வாழ்க்கையை எளிதாக்குவதற்கான முன்முயற்சிகள், காலாவதியான சட்டங்களை ரத்து செய்தல், நடுவர்மன்ற அமைப்புமுறை, பாலின நீதி மற்றும் பயிற்சி திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் இந்தக் கூட்டத்தில் நடைபெற்றன.
இருநாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த அம்சங்களின் செயலாக்கம் குறித்தும் இருதரப்பிலும் விவாதிக்கப்பட்டது. சட்டம் மற்றும் நீதித்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், பிரிட்டனும் உறுதிபூண்டிருப்பதை இந்தச் சந்திப்பு பிரதிபலித்தது.
***
(Release ID: 2187238)
SS/SMB/AG/RJ
(Release ID: 2187494)
Visitor Counter : 6