நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நித்தி ஆயோக்கின் சிறப்பு பிரச்சாரம் 5.0 நிறைவு நிலுவை வழக்குகள் 100 சதவீதம் தீர்வு

Posted On: 06 NOV 2025 4:15PM by PIB Chennai

அரசு அலுவலகங்களில் உள்ள கழிவுகளை அகற்றுதல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காண மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பு பிரச்சாரம் 5.0-ஐ நித்தி ஆயோக் 2025 அக்டோபர் 2 முதல் 31, வரை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது.

இதன் மூலம் நிலுவையில் இருந்த மூன்று பொதுக் குறைபாட்டு மனுக்கள் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுதிமொழிகள் 100 சதவீதம் தீர்க்கப்பட்டன. மொத்தம் 2,353 கோப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டு, அதில் 2,111 கோப்புகள் நீக்கப்பட்டன. துணைத் தலைவர் சுமன் கே. பெர்ரி தலைமையில் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

விரிவான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோப்புகள் அகற்றப்பட்டதன் மூலம் 215 சதுர அடி அலுவலக இடம் கிடைத்தது. மேலும், கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம் ₹23,916 வருவாய் கிடைத்தது. இந்த இயக்கம், அலுவலகத்தில் தூய்மை மற்றும் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186978

***

AD/VK/SH


(Release ID: 2187162) Visitor Counter : 3