குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் மாநில வெள்ளிவிழா நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு

Posted On: 05 NOV 2025 7:54PM by PIB Chennai

நவ ராய்ப்பூரில் நடைபெற்ற சத்தீஸ்கர் ரஜத் பெருவிழாவின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர்  திரு சி பி  ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் இந்த நிகழ்வு, அதன் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் கலாச்சார செழுமையின் ஊக்கமளிக்கும் பயணத்தைக் கொண்டாடுகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், நக்சலைட் அச்சுறுத்தலை ஒழிப்பதில் மாநிலம் பெற்ற வெற்றியைப் பாராட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆகியோரின் உறுதியான தலைமைக்கும், மாநில அரசு, பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் சமூகங்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். சத்தீஸ்கரில் வளர்ச்சியும்நம்பிக்கையும் வன்முறையை மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறினார்.

மாநிலத்தின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக பழங்குடி சமூகங்களுக்கு திரு சி பி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். இன்றைய சுற்றுச்சூழல் மற்றும் சமூக சூழலில் ஆழமான பொருத்தப்பாட்டைக் கொண்ட பழங்குடி சமூகங்களின் ஞானம், கலாச்சாரம் மற்றும் நிலையான வாழ்க்கைமுறைக்காக அவர் அவர்களைப் பாராட்டினார்.

ரஜத் பெருவிழாவை கடந்த காலத்தின் கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், எதிர்காலத்திற்கான உறுதிமொழியாகக் கருத வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், கலாச்சாரத்தை கௌரவிப்பதற்கும், வருங்கால சந்ததியினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதற்கும் இது ஒரு உறுதிமொழியாகும் என்று கூறினார்.

சத்தீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா, முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய்; சட்டமன்றத் தலைவர் டாக்டர் ராமன் சிங் மற்றும் இதர பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186717

 

***

 

(Release ID: 2186717)

SS/BR/KR


(Release ID: 2186850) Visitor Counter : 3