அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மூன்று தலைசிறந்த புதிய கண்டுபிடிப்புகளை பிரதமர் நாட்டிற்கு பரிசளித்துள்ளார்
Posted On:
05 NOV 2025 4:07PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டின்போது மூன்று தலைசிறந்த புதிய கண்டுபிடிப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு பரிசாக வழங்கியிருக்கிறார். இந்தியாவிற்கு சொந்தமான குவாண்டம் பாதுகாப்பு சிப் (QSIP), கணக்கீட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் இந்தியாவின் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் (25-qubit QPU) மற்றும் இந்தியாவின் முதல் உள்நாட்டு புற்றுநோய் செல் சிகிச்சை (CAR-T செல் சிகிச்சை) ஆகிய மூன்று கண்டுபிடிப்புகளும் இந்திய கண்டுபிடிப்பாளர்களால் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இம்யூனோ ஆக்ட்-ஆல் (ImmunoACT ) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட NexCAR19, உலகின் முதல் மனிதமயமாக்கப்பட்ட புற்றுநோய் செல் சிகிச்சையாகும். “உலகிற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது” என்பதற்கு இது ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகும். உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) ஆகியவை இந்த கண்டுபிடிப்புக்கு ஆதரவளித்தன.
புற்றுநோய் சிகிச்சையில் கைமெரிக் ஆன்டிஜென் ரிசெப்டர் டி-செல் (CAR-T) சிகிச்சை ஒரு திருப்புமுனையாக உருவெடுத்துள்ளது. உலகளவில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள், இறுதிநிலை நோயாளிகளுக்கு, குறிப்பாக கடுமையான லிம்போசைடிக் லுகோமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளன.
ஐஐடி பாம்பாயின் ஒரு துணை நிறுவனமான இம்யூனோ ஆக்ட், நிதி, வழிகாட்டுதல் மற்றும் வளங்கள் மூலம் உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் பயோநெஸ்ட் முன்முயற்சியிலிருந்து ஆதரவைப் பெற்றது. அதே நேரத்தில் இந்த புத்தொழில் நிறுவனம், தொழில்நுட்ப வணிக இன்குபேட்டரான புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவின் சங்கத்தில் (SINE) மேம்படுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186651
(Release ID: 2186651)
***
AD/BR/SH
(Release ID: 2186753)
Visitor Counter : 18