குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்
Posted On:
04 NOV 2025 2:33PM by PIB Chennai
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ஆசிரியர்கள் உருவாக்கிய மருத்துவ உபகரணங்களின் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார்.
அச்சுதமேனன் சுகாதார அறிவியல் கல்வி மையத்தில் புத்தொழில் நிறுவனங்களை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ அறிவியல் மற்றும் உயிரி மருத்துவத் தொழில்நுட்பத்தில் இந்நிறுவனம் நாட்டிற்காக சேவையாற்றுவதாகக் கூறினார். மற்ற கல்வி நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இந்நிறுவனம் திகழ்வதாகவும் அவர் கூறினார். மிகக் குறைந்த விலையிலான சித்ரா இதயவால்வு, சித்ரா ரத்தப்பை, காசநோயைக் கண்டறிவதற்கான உடனடி சோதனைக்கான கருவி உள்ளிட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்காக தாம் இந்நிறுவனத்தைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். விளிம்பு நிலை மக்களுக்காக சேவையாற்ற ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186205
***
AD/IR/KPG/AG
(Release ID: 2186332)
Visitor Counter : 10