வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சத்தீஸ்கரிலிருந்து கோஸ்டாரிகாவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
Posted On:
04 NOV 2025 9:54AM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சத்தீஸ்கரிலிருந்து கோஸ்டாரிகாவுக்கு முதலாவது ஏற்றுமதியாக 12 மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசியை அனுப்ப வகை செய்துள்ளது. ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஊட்டச்சத்து குறைபாடு இல்லா இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த முன்முயற்சியாக இந்திய உணவுக் கழகம் செறிவூட்டப்பட்ட அரிசியை நாடு முழுவதும் விநியோகித்து வருகிறது. உலக அளவில் சென்றடைவதுடன் இந்தியாவின் உள்நாட்டு ஊட்டச்சத்து இயக்கத்தை ஒருங்கிணைப்பதில், முக்கிய நடவடிக்கையாக செறிவூட்டப்பட்ட அரிசியை ஏற்றுமதி கருதப்படுகிறது.
சர்வதேச சந்தைகளில் மாநில விவசாயிகள், தானிய அரவையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், அங்கீகாரம் பெறும் வகையில், அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசியை ஏற்றுமதி செய்யப்படுவதை ஊக்கப்படுத்துவதற்கு சத்தீஸ்கர் மாநில அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186123
***
AD/IR/KPG/AG
(Release ID: 2186208)
Visitor Counter : 11