நிலக்கரி அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 5.0-வில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைவிட அதிக நடவடிக்கைகளை நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது
Posted On:
04 NOV 2025 11:06AM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 5.0 நடவடிக்கைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைவிட அதிக அளவிலான நடவடிக்கைகளை நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. 2025 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு இயக்கம் 5.0 பணிகளின் போது திட்டமிட்ட இலக்கைவிட ரூ.56,85,76,462 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 1,28,527 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு களையப்பட்டது. இப்பணிகள் தொடர்பாக 3,107 ட்விட்டர் பதிவுகளையும் 28 பத்திரிகை செய்திகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 1,439 இடங்களில் தூய்மைப் பணிகளுக்கான இயக்கம் நடத்துவதென திட்டமிட்ட நிலையில், 1741 இடங்களில் இப்பணிகள் நடைபெற்றுள்ளன. 8,678 மெட்ரிக் டன் அளவிற்கு பழைய பொருட்களை அகற்றுவதென இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 14,017 மெட்ரிக் டன் அளவிற்கு பழைய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நான்கு பரிந்துரைக்கும் பொது மக்களின் 166 குறைகளுக்கும் பிரதமர் அலுவலகத்தின் 61 பரிந்துரைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. 1,23,830 நேரடி கோப்புகள் ஆய்வு செய்யப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1,90,841 நேரடி கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. 32,182 மின் கோப்புகள் ஆய்வு செய்யப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 65,637 மின் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186131
---
AD/IR/KPG/AG
(Release ID: 2186189)
Visitor Counter : 13