பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாடு தழுவிய "டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்" பிரச்சாரம் 4.0-ன் கீழ், தில்லியில் பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த ஓய்வூதியதாரர்கள் முகாமை, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
03 NOV 2025 5:19PM by PIB Chennai
தேசிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC) பிரச்சாரம் 4.0-ன் கீழ் தில்லியில் பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த மெகா ஓய்வூதியதாரர்கள் முகாமை 2025 நவம்பர் 3 அன்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்து, ஓய்வூதியதாரர்களிடம் உரையாற்றினார். டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பதற்கு அரசு எடுத்த முயற்சியை இது எடுத்துக்காட்டுகிறது.
நாடு தழுவிய டிஎல்சி பிரச்சாரம் 4.0, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையால் பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நடத்தப்படுகிறது. நாட்டின் தொலைதூர மூலைகளில் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களையும் சென்றடையும் நோக்கில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
மெகா முகாமின் போது, டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியதாரர்களுடன் உரையாடினார். ஓய்வூதியதாரர்களின் வசதிக்காகவும் வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு வசதி குறித்து பயனாளிகள் மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185911
(Release ID: 2185911)
***
AD/BR/SH
(रिलीज़ आईडी: 2186106)
आगंतुक पटल : 30