பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஒடிசாவில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15வது நிதிக் குழுவின் மானியமாக ரூ.444 கோடியை மத்திய அரசு விடுவித்தது
Posted On:
03 NOV 2025 3:26PM by PIB Chennai
2025–26 நிதியாண்டில் ஒடிசாவின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக் குழுவின் மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதில் ரூ.342.5964 கோடி ரூபாய் மானியங்களின் 2வது தவணையாகும். இந்த நிதி தகுதிவாய்ந்த 20 மாவட்ட பஞ்சாயத்துகள், தகுதி வாய்ந்த 296 வட்டார பஞ்சாயத்துகள், தகுதி வாய்ந்த 6734 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றிற்காக வழங்கப்படுகிறது. அத்துடன் முதல் தவணையாக ரூ.101.7815 கோடி தகுதி வாய்ந்த 20 மாவட்ட பஞ்சாயத்துகள், தகுதி வாய்ந்த 233 பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் தகுதி வாய்ந்த 649 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அளிக்கப்படுகிறது. 11வது பட்டியலில் உள்ளதன் அடிப்படையில், 29 வகைகளுக்காக இந்த மானியங்கள் பயன்படுத்தப்படலாம்.
***
AD/IR/LDN/SH
(Release ID: 2185992)
Visitor Counter : 8